புதுச்சேரி போலி மருந்து சர்ச்சை: முதலமைச்சர் மௌனத்தை கண்டித்து கருப்பு துணியணிந்த ஆர்ப்பாட்டம்

Wednesday, December 3, 2025 - 22:27
Updated: 9 months ago
0

புதுச்சேரி (RNI) போலி மாத்திரைகள் தயாரித்த விவகாரத்தில் முதலமைச்சர் மௌனம் காப்பதை கண்டித்து, வில்லியனூரில்  சேர்ந்த ஜே.சி்எம் மக்கள் மன்ற சார்பில் பூக்கடை ரமேஷ் தலைமையில் கண்களில் கருப்பு துணி கட்டி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் இருந்து பிரபல மருந்து நிறுவனத்தின் பெயரில் போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக சிபிசிஐடி போலீசாருக்கு புகார் கிடைத்தது. அதன் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து கடந்த வாரம் ஜே.சி.எம். மக்கள் மன்றம் சார்பாக சட்டமன்றம் அருகே  சமூக சேவகர் சார்லஸ் மார்டின் அறிவுறுத்தலின் பேரில் போராட்டம் நடைபெற்றது. மேலும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க கோரி கடிதம் வழங்கப்பட்டது. 
ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, இந்நிலையில் இதனை கண்டித்து புதுச்சேரி மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஜே.சி.எம் மன்றம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக வில்லியனூரில் JCM மக்கள் மன்ற வில்லியனூர் தொகுதி தலைவர் பூக்கடை ரமேஷ் தலைமையில்  தென்கோபுர வீதியில் 200க்கும்  மேற்பட்ட பெண்கள், இளைஞர்கள் கலந்து கொண்டு கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு போலி மருந்து குறித்து  முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும், முதலமைச்சரை பதவி நீக்கம் செய்ய கோரியும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User