லாஸ்பேட்டை தொகுதியில் என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் வி.பி. சிவக்கொழுந்து தீவிர பிரச்சாரம் தொடக்கம்

Mar 24, 2026 - 16:42
Mar 24, 2026 - 16:43
 0  405
லாஸ்பேட்டை தொகுதியில் என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் வி.பி. சிவக்கொழுந்து தீவிர பிரச்சாரம் தொடக்கம்

புதுச்சேரி (RNI) தேசிய ஜனநாயக கூட்டணியில் லாஸ்பேட்டை தொகுதி என்.ஆர் காங்கிரஸ்க்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அதன் வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் வி.பி. சிவக்கொழுந்து அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் தனது வேட்பு மனுவையும் தாக்கல் செய்துள்ளார்.

பிரச்சாரத்தின் தொடக்கமாக, லாஸ்பேட்டை தொகுதிக்குட்பட்ட மகாவீர் நகர் பகுதியில் உள்ள பெருமாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அதன் பின்னர், மகாவீர் நகர் பகுதியில் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து, “ஜக்கு” சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டார்.

இந்த பிரச்சாரத்தில் சப்தகிரி அறக்கட்டளை பொறுப்பாளர் விபிஎஸ் ரமேஷ் குமார் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சி நிர்வாகிகள், அறக்கட்டளை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
 
Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0