புதுச்சேரியில் ஏஐடியூசி தலைமையில் ஆர்ப்பாட்டம் — அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.5000 தீபாவளி உதவித் தொகை வழங்க கோரிக்கை
புதுச்சேரி (RNI) அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி உதவித்தொகை 5000 வழங்கிடு அமைப்புசாரா நல வாரியத்தில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு தீபாவளி பண்டிகை காலங்களில் வழங்கி வந்த உதவித் தொகையை ரூபாய் 5000 ஆக உயர்த்தி வழங்கிடு. கட்டுமான வாரிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை ரூபாய் 6000 ஆக உயர்த்தி வழங்கிடு.
அமைப்புசாரா நல வாரியத்தை முழுமையாக செயல்படுத்து
அமைப்பு சாரா தொழிலாளர்களின் நீண்ட போராட்டத்திற்கு பிறகு அரசு கோரிக்கையை ஏற்று அமைப்பு சாரா சங்கத்தை நலவாரியமாக மாற்றி செயல்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வாரியத்தின் மூலம் நலத்திட்ட உதவிகளை வழங்கிட தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து வாரியம் முழு செயல்பாட்டுக்கு கொண்டுவர விரைவாக நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
பாசிக் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்த 38 கோடியை உடனடியாக சம்பளமாக வழங்கிடு
பாசிக் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை சம்பளம் வழங்க வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது. போராட்டத்தின் விளைவாக கடந்த பட்ஜெட்டில் நிலுவை சம்பளம் வழங்க 38 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியை உடனடியாக பாசிக் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கிட வேண்டும்.
பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை சம்பளம் முழுவதையும் வழங்கிடு, நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்து
பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை சம்பளம் வழங்க வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தது. அரசு கோரிக்கையை ஏற்காமல் ஊழியர்களை அலட்சியப்படுத்தி வந்தார்கள். ஏஐடியூசி வழிகாட்டுதலின் பேரில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவை சம்பளம் வழங்க வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முழு சம்பளத்தையும் புதுச்சேரி அரசு வழங்க வேண்டுமென தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பினை ஏற்று புதுச்சேரி அரசு பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை சம்பளம் முழுவதையும் வழங்கிட வேண்டும்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி
சட்டமன்றம் முன்பு
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு
ஏ ஐ டி யூ சி மாநில பொதுச் செயலாளர்
சேதுசெல்வம் தலைமை வகித்தார்.
மாநில தலைவர் தினேஷ் பொன்னையா போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.
மாநில கௌரவ தலைவர் அபிஷேகம் போராட்டத்தை முடித்து வைத்து பேசினேன்
மாநில பொருளாளர் அந்தோணி
மாநில துணைத்தலைவர்கள்
சந்திரசேகரன், முருகன்,
சேகர்,
மோதிலால்,
மண்ணாதன், சிவகுருநாதன்,
மாநில செயலாளர்கள்
தயாளன்,
துரைசெல்வம், முத்துராமன், மூர்த்தி,
செந்தில் முருகன், ஹேமலதா,
பாஸ்கர பாண்டியன்,
பாஸ்கர்
ஆகியோர் உட்பட தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.
பேட்டி :
சேதுசெல்வம்
ஏஐடியூசி மாநில பொதுச் செயலாளர்.
Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0



