புதுச்சேரியில் பிரபல ரவுடி வெட்டி கொலை

Thursday, September 18, 2025 - 19:16
Updated: 10 months ago
0

புதுச்சேரி வில்லியனூர் அருகே உருவையாறு பகுதியைச் சேர்ந்த சௌந்தர் (தனியார் கம்பெனி ஓட்டுநர்) நேற்று மாலை உத்தர வாகனி பேட்டையில் தனது மாமியார் வீட்டுக்குச் சென்றபோது மர்ம நபர்களால் வழிமறிக்கப்பட்டார். கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த வில்லியனூர் போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், சௌந்தரின் சகோதரரும் பிரபல ரவுடியுமான ஜீவாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலான கொலை என தெரியவந்துள்ளது.

ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் சௌந்தரை வெட்டியவுடன் தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது. இவர்களை கைது செய்ய வில்லியனூர் போலீசார் தீவிர தேடுதல் நடத்தி வருகின்றனர்.

ஆள் நடமாட்டம் அதிகமான பகுதியில் நடைபெற்ற இந்த படுகொலை புதுச்சேரி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User