புதுச்சேரி: உள்ளாட்சித் தேர்தலுக்காக ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கத்தின் 7 நாள் நியாயப்பாதை யாத்திரை தொடங்கியது

Monday, September 22, 2025 - 13:28
Updated: 11 months ago
0
புதுச்சேரி: உள்ளாட்சித் தேர்தலுக்காக ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கத்தின் 7 நாள் நியாயப்பாதை யாத்திரை தொடங்கியது

புதுச்சேரி (RNI) புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த கோரி ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் சார்பில் அமுதரசன் தலைமையில் புதுச்சேரி 23 தொகுதிகளில் 7 நாட்களுக்கு நியாயப்பாதை யாத்திரை நடத்த முடிவெடுத்து அதன்படி 
3 ஆம் நாள் உப்பளம் தொகுதியில்  பாதயாத்திரை தொடங்கியது.
 
இந்த நிகழ்ச்சியில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தலைவர் டாக்டர் சுனில் பன்வர் அவர்கள், தேசிய செயலாளரும் புதுச்சேரி பொறுபாளருமான கடலூர் ரமேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

 உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட கம்பன் கலையரங்கம் அருகில் இருந்து வட்டார காங்கிரஸ் குமரன், லட்சுமணன், கட்சி பொது செயலாளர் இளையராஜா, RE சேகர், ராஜ்குமார், தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் பாதயாத்திரை தொடங்கியது.

 இதைத் தொடர்ந்து முதலியார்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பாதயாத்திரை  RGPRS மாநில செயலாளர் புஷ்பராஜ், கட்சி மாநில செயலாளர்  கோபி, வட்டார காங்கிரஸ் ஜெகவீரபாண்டியன், திருமலை,
மகிலா காங்கிரஸ் தலைவி நிஷா, மகளிர் நிர்வாகிகள் சாந்தி, மாவட்டத் தலைவி ஜெயமேரி, மாவட்ட செயலாளர் மேரி இரத்தினகுமாரி, தங்கமணி, INTUC ஞானசேகர் மற்றும்  நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். இறுதியில் பாதயாத்திரை மரப்பாளத்தை  சென்று அடைந்தது. 

 மேலும் இந்த நிகழ்ச்சியில் கோவிந்தன், சங்கர் பாபு, புஷ்பராஜ், வேல்முருகன், பழனிவேல், சிவபாலன், அரிகிருஷ்ணன், ராமநாதன், திருநாராயணன், சிவபெருமாள், கலிவரதன், சத்தியசீலன், சசிகுமார், 
ஆறுமுகம், வாசு, காளிமுத்து, சங்கர் , சீதாராமன், ரவி, ராமராஜ், கடலூர் கோபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User