Puducherry மாநிலம் முழுவதும் CBSE 10 & 12 பொதுத் தேர்வுகள் தொடக்கம்: 11,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதி வருகின்றனர்
புதுச்சேரி மாநிலம் முழுவதும் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு CBSE மாணவர்களுக்கு இன்று பொதுத் தேர்வு தொடங்கியது,இதில் 10-ம் வகுப்பு தேர்வை 122 பள்ளிகளை சேர்ந்த 5,638 மாணவர்களும் 12-ம்வகுப்பு தேர்வை 60 பள்ளிகளை சேர்ந்த 5,566 மாணவர்களும் எழுதுகின்றனர்*
புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மத்திய இடைநிலைக் கல்வி வாரிய
(CBSE) பொதுத் தேர்வுகள்,17.ந் தேதி இன்று முதல் வருகின்ற மார்ச் 9-ம் தேதி வரை புதுச்சேரி, காரைக்கால்,
மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் நடைபெறுகிறது.
இந்த தேர்வு புதுச்சேரி பகுதியில் 25 தேர்வு மையங்களும், காரைக்கால்
பகுதியில் 08 தேர்வு மையங்களும் மாஹே,ஏனாம் பகுதியில் தலா 02 தேர்வு மையங்களும் தேர்வு செய்யப்பட்டு தேர்வு நடைபெறுகிறது.
இன்று காலை சாமி தரிசனம் செய்துவிட்டு பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகள் ஆர்வமுடன் தேர்வுகளை எழுதி வருகின்றனர், மாணவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதிகள் என அனைத்து வசதிகளும் பள்ளி கல்வித்துறை சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தேவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதை தவிர்ப்பதற்கு பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை 83 அரசு பள்ளிகளைச் சார்ந்த 3916 மாணவர்களும்,
பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வினை 44 அரசு பள்ளிகளைச் சார்ந்த 3953 மாணவர்களும் தேர்வெழுதுகின்றனர்.
காரைக்கால் பகுதியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை 1134
மாணவர்களும், பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வினை 1223 மாணவர்களும் எழுதுகின்றனர்.
இதேபோல் மாஹே பகுதியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை 333 மாணவர்களும், பனிரெண்டாம் வகுப்பு
பொதுத் தேர்வை 346 மாணவர்களும் எழுதுகின்றனர்.
ஏனாம் பகுதியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை 255 மாணவர்களும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வினை 44
மாணவர்களும் எழுதுகின்றனர்.
தேர்வு நடைபெறும் நாட்களில் தேர்வெழுத வருகை தரும் தேர்வர்கள் எவரும் அலைபேசி (Mobile Phone) மற்றும் எந்தவொரு தகவல் தொடர்பு சாதனங்களையும் எடுத்துவர தடை செய்யப்பட்டுள்ளது.
தேர்வு மையத்தில் ஒழுங்கீன செயலில் ஈடுபடும் தேர்வர்கள் கண்டறியப்பட்டால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு, துணைநிலை ஆளுநர் கைலாசநாதன், முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0



