புதுச்சேரியில் இளைஞர் கொலை: பிறந்தநாள் விருந்து தகராற்றில் நண்பர்களே கைது
புதுச்சேரி (RNI) புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கருவடிக்குப்பம் பகுதியை சேர்ந்த நவநீதம் க/பெ பலராமன் அவர்கள் 04.10.2025 அன்று தனது மகன் அப்பு என்கிற பிரதாப் கொலை செய்யப்பட்டு விட்டதாக கொடுத்த புகார் அடிப்படையில் குற்ற எண் 210/2025 u/s 103 (1),r/w 3 (5) BNS.
வழக்கு பதிவு செய்யப்பட்டு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் பொறுப்பு மற்றும் வடக்கு பிரிவு காவல் கண்காணிப்பாளர் திரு ரகுநாயகம் உத்திரவின் பேரில் தனிப்படை அமைத்து விசாரணை செய்ததில் கொலை செய்யப்பட்ட அப்பு என்கிற பிரதாப் அவரின் நெருங்கிய நண்பர் திரு. வினோத் என்கிற மண்ணெண்ணெய் வினோத் அவருக்கு 04.10.2025 அன்று பிறந்தநாள் என்பதால் அவருடன் கொலையுண்ட பிரதாப், பெத்து செட்டி பேட்டை சேர்ந்த பழனி முருகன் மற்றும் கதிர் காமம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் ஆகியோருடன் பெத்துசெட்டி பேட்டை காலி மைதானத்தில் இரவு மது அருந்தும் போது ஏற்பட்ட வாய் தகராறு காரணமாக மேற்கண்ட வினோத் பழனி முருகன் கிருஷ்ணகுமார் ஆகியோர் மது அருந்திய பீர்பாட்டிலாலும்,கட்டையாலும் அடித்து கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்ததையடுத்து, புகார் அளித்த 24 மணி நேரத்தில் மேற்கண்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0



