புதுச்சேரியில் மாற்று இடம் வழங்காத அரசுக்கு எதிராக திமுக எம்எல்ஏக்களின் உண்ணாவிரத போராட்டம்

Tuesday, September 23, 2025 - 16:03
Updated: 12 months ago
0

புதுச்சேரி (RNI) புதுச்சேரியில் சாலை விரிவாக்க பணிக்கு இடம் வழங்கிய மக்களுக்கு மாற்று இடம் வழங்க கோரி திமுக எம்எல்ஏ தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு.

புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதிக்குட்பட்ட மரப்பாலம் சந்திப்பிலிருந்து வில்லியனூர்- கொம்பாக்கம் செல்ல மாற்று சாலையாக வேல்ராம்பட்டு ஏரிக்கரை சாலை உள்ளது. இந்த சாலையில் தனியார் பள்ளி, அரசு பள்ளி மற்றும் தனியார் கல்லூரி உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும் இந்த பகுதியை சுற்றி 10 ஆயிரத்திற்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. இந்த சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருந்தது. இந்த சாலையில் அடிக்கடி விபத்துகளும் நடைபெற்று வந்தது. இந்த சாலையை விரிவாக்கம் செய்ய அரசின் சார்பில் அங்கு குடியிருந்தோருக்கு மாற்று இடம் வழங்கப்படும் என்று அரசு உத்தரவாதம் அளித்தது. 

இதனையடுத்து  தொகுதி எம்எல்ஏ சம்பத் குடியிருப்பு வாசிகளிடம் பேசி இடத்தை காலி செய்து கொடுத்தார். இதனால் புதிய சாலை அமைக்கப்பட்டு, சாலை விரிவாக்க பணி முடிந்தது. இந்த சாலை பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள சாலையாக அமைந்துள்ளது. ஆனால் அரசு உறுதியளித்தது போல் மாற்று இடம் இதுவரை வழங்கவில்லை. இதேபோல ஜெயமூர்த்தி ராஜா நகர், பெரிய வாய்க்கால் வீதியில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய குடும்பத்தினர் 40 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு வசித்து வருகின்றனர். அவர்களுக்கும் மாற்று இடம் வழங்கவில்லை. மாற்று இடம் வழங்க வலியுறுத்தி தொகுதி திமுக எம்எல்ஏ சம்பத் தலைமையில் மரப்பாலம் சந்திப்பில்  உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது. திமுக மாநில இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத் தலைமை தாங்கிட உண்ணாவிரதத்தை மாநில அமைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சிவா தொடங்கி வைத்தார்.

உண்ணாவிரதத்தில்  திமுக எம்எல்ஏக்கள் கென்னடி, செந்தில்குமார், மாநில அவைதலைவர் சிவக்குமார், முன்னாள் எம்எல்ஏக்கள் நந்தா சரவணன், மூர்த்தி மற்றும் நிர்வாகிகள், பாதிக்கப்பட்ட மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

பேட்டி: சம்பத், சட்டமன்ற உறுப்பினர்.

Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User