புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டை தொகுதியில் நாதன் அறக்கட்டளை சார்பில் மாபெரும் பரிசளிப்பு விழா நடைபெற்றது

Sunday, August 31, 2025 - 14:47
Updated: 12 months ago
0
புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டை தொகுதியில் நாதன் அறக்கட்டளை சார்பில் மாபெரும் பரிசளிப்பு விழா நடைபெற்றது

புதுச்சேரி (RNI) புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டையில் நாதன் அறக்கட்டளை சார்பில் 10 மற்றும் 12 வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கும் மற்றும் தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மகாவீர் நகர் சூர்யா கேட்டரிங் கல்லூரியில்  சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் நாதன் அறக்கட்டளை நிறுவனர் சாமிநாதன் அவர்கள்  பரிசுகளை வழங்கினார்

இதில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவருக்கு ரூபாய் 5000 மதிப்புள்ள பரிசு பொருட்களும், இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவருக்கு ரூபாய் 2000 மதிப்புள்ள பரிசு பொருட்களும்,  மூன்றாம் மதிப்பெண் பெற்ற மாணவருக்கு ரூபாய் 2000 மதிப்புள்ள பரிசுகளும் மற்றும்  ஆறுதல் பரிசாக தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் ரூபாய் 1500 மதிப்புள்ள மழைக்கோர்ட் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நாதன் அறக்கட்டளை நிர்வாகிகள் முருகன், வெங்கடேசன், நடராஜன், குமரேசன், சுரேஷ்குமார், ஆனந்தராஜ், சுப்பிரமணி, ஜெகதீசன், வழக்கறிஞர் கார்த்தி, பாலா,  சத்தியமூர்த்தி, கங்கைஅமரன், ஏழுமலை, கார்த்திகேயன், தமிழ்வாணன் மற்றும் நாதன் அறக்கட்டளை மகளிர் நிர்வாகிகள் வள்ளி, வசந்தா, கௌரி, குமாரி, ஜானகி, பரமேஸ்வரி, அன்புச்செல்வி மற்றும் பராசக்தி ஆன்மீக இயக்க நிர்வாகிகள் கனகவல்லி, ரேவதி, பிரவீனா, பிரபா, மோனி மற்றும் லாஸ்பேட்டை தொகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்

அதனைத் தொடர்ந்து இந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் நாதன் அறக்கட்டளை நிறுவனர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுவாமிநாதன் அவர்கள்  மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்க்கையில் முன்னேற தகுந்த ஆலோசனைகள் வழங்கினார்கள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User