புதுச்சேரியில் மாசடைந்த குடிநீரால் பலர் பாதிப்பு – MLA நேரு தலைமையில் பொதுப்பணித்துறை அலுவலகம் முற்றுகை
புதுச்சேரி (RNI) புதுச்சேரியில் பொதுப்பணித்துறை சார்பில் விநியோகிக்கப்பட்ட சுகாதாரமற்ற குடிநீரால் பலர் மருத்துவமனையில் அனுமதி. சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் பொதுமக்கள் மாசடைந்த தண்ணீருடன் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு.
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட நேரு நகர், கோவிந்தசாலை உள்ளிட்ட சில பகுதிகளில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்றவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அசுத்தமான குடிநீர் வினியோகிப்பதாக பொதுப்பணித்துறை குடிநீர் பிரிவு அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை பிரச்சனை தீர்ந்தபாடில்லை. இந்நிலையில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் பாதிக்கப்பட்ட மக்கள் அசுத்தமான குடிநீருடன் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரியை சந்தித்து முறையிட்டனர். இதுகுறித்து உடனடியாக என்ன பிரச்சனை என்று சரிபார்ப்பதாக அதிகாரி உறுதியளித்தார். உடனடியாக தீர்வு காண வேண்டும் என நேரு எம்எல்ஏ மற்றும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0



