முதலியார் பேட்டை பகுதியில் குடிநீர் மாசு – பொதுப்பணித்துறை அலுவலகம் முற்றுகையிட்ட மக்கள்

Aug 28, 2025 - 13:12
Aug 28, 2025 - 13:12
 0  135

புதுச்சேரி (RNI) புதுச்சேரி முதலியார் பேட்டை தொகுதி உட்பட்ட சுதானா நகர்  பகுதியில் சுமார் 20 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு தற்சமயம் சுதானா நகர் நைனார் மண்டபம் முருங்கப்பாக்கம் வேல்ராம்பட்டு போன்ற பகுதிகளில் புதிதாக குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது இந்த குடிநீரானது குடிப்பதற்கு ஏற்றதாக இல்லை மாசடைந்து  நிலையில் உள்ளதால் அப்பகுதி மக்கள் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பழைய குடிநீர் குழாயில் பழுதடைந்தது ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு அதில் கழிவுநீரும் குடிநீரும் கலந்து வருவதால் பலர் வாந்தி பேதி வயிற்றுப்போக்கு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் மேலும் தற்போது அமைக்கப்பட்டுள்ள புதிய குடிநீர் குழாய்கள் பல வீடுகளுக்கு வாய்க்கால் வழியில் அமைந்துள்ளனர் இதனால் குடிநீரும் கழிவு நீரும் கலந்து வருகின்றன ஆகவே போர்க்கால அடிப்படையில்  பழைய குடிநீர் இணைப்பை துண்டித்து புதிய குடிநீர் குழாய் மூலம் மட்டுமே சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என மேலும் வாய்க்கால் நடுவே அமைத்துள்ள குடிநீர் இணைப்பை அகற்றி வீட்டின் சுவற்றுக்கு அருகே இணைப்பு கொடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இப் போராட்டத்தில் முன்னாள் கவுன்சிலர் சத்யராஜ் பாஜக புதுச்சேரி வணிக பிரிவு மாநில தலைவர் தலைமையில் நடைபெற்றது.

Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0