புதுச்சேரி சின்ன வீராம்பட்டினம் கடற்கரையில் குளித்த பெண் உட்பட 3 பேர் ராட்சத அலையில் சிக்கி பலி
புதுச்சேரி (RNI) சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று முதல் 3 நாட்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால் சுற்றுலாவுக்கு பலரும் பல இடங்களுக்கு சென்று வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரிக்கு கர்நாடகா, கேரளா , ஆந்திர பிரதேசம் பகுதியில் இருந்து சுற்றுலாவுக்கு ஏராளமானோர் வந்துள்ளனர்..இதனால் கடற்கரை மற்றும் சுற்றுலா தளங்களில் வழக்கத்தை விட கூட்ட நெரிசல் இருந்து வருகிறது.
இதைப் போல பெங்களூரு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து சுற்றுலாவுக்கு 2 பெண் உட்பட்ட 12 பேர் புதுச்சேரி வந்துள்ளனர். நேற்று புதுச்சேரி பகுதயை சுற்றி பார்த்தவர்கள் இன்று அரியாங்குப்பம் அடுத்த சின்ன வீராம்பட்டினம் பீச்சிற்கு வந்துள்ளனர். பிறகு அங்கு வந்தவர்கள் கடற்கரையில் குளித்து உள்ளனர். நீண்ட தூரம் செல்லாதவாறு பாதுகாப்பு ஊழியர்கள் கயிறு கட்டியிருந்ததை மீறி சிலர் குளித்து உள்ளனர். அப்போது ராட்சத அலை வந்ததில் எதிர்பாராத விதமாக சிக்கி உள்ளனர். இதில் சிக்கியவர்கள் சத்தம் போடவே அங்கு இருந்தவர்கள் ஆபத்தான நிலையில் இருந்த அதிதீ வயது 23, ஜீவன் 23, மற்றும் உயிரிழந்த பவன் வயது 25. மேகா வயது 27. பிரிட்ஞ்வால் வயது 24 ஆகியோர் பிணமாக மீட்டனர். தகவல் அறிந்தவுடன் அரியாங்குப்பம் போலீசார் இறந்வர்கள் மற்றும் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளவர்களை மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சுற்றுலாவுக்கு வருபவர்கள் அலையில் சிக்கி இறப்பது வாடிக்கையாகிவிட்டது.
Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0



