புதுச்சேரி ஆன்லைன் காவல் மன்றம்: 30 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களுக்கு ஒப்படைப்பு, ₹7 லட்சம் மதிப்பு

Aug 17, 2025 - 14:49
Aug 17, 2025 - 14:49
 0  81
புதுச்சேரி ஆன்லைன் காவல் மன்றம்: 30 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களுக்கு ஒப்படைப்பு, ₹7 லட்சம் மதிப்பு

புதுச்சேரி (RNI) புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தில் நடந்த மக்கள் மன்றத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நித்யா ராதாகிருஷ்ணன் IPS மற்றும்  காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் PPS தலைமை வகித்தார்கள்  மற்றும் காவல் ஆய்வாளர்கள்  தியாகராஜன், கீர்த்தி மற்றும் இதர காவலர்கள் கலந்து கொண்டனர். 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுடைய  வழக்கு சம்பந்தமாகவும் Lien /Unlien , Frezee /Unfreeze சமந்தமாக குறைகளை தெரிவித்தனர் உடனடியாக அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆய்வாளருக்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நித்யா ராதாகிருஷ்ணன் IPS  உத்தரவிட்டார். 
 
மேலும் பொதுமக்கள் தவறவிட்ட 30 செல்போன்கள் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது அதன்  மதிப்பு 7,00,000 லட்சம் ஆகும். 

மேலும் சமீபத்தில் நடைபெறும் இணைய வழி குற்றங்களான

App  மூலம் உடனடி கடன் மற்றும் குறைந்த வட்டியில் loan தருவதாக கூறி உங்கள் புகை படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டினால் அதனை நம்பி யாரும் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் .

சமூக வலைதளங்கள் மூலமாக உங்களுக்கு குறைந்த முதலீட்டில் ஷேர் மார்க்கெட் டிரேடிங் செய்து தருகிறோம் என்று ஆசை வார்தை கூறினால் பணம் முதலீடு செய்யாதீர்கள் . 

பிடெக்ஸ் கொரியர், ட்ராய், மும்பை போலீஸ், ல் இருந்து பேசுவதாக கூறி உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளோம் என்று கூறினால் அவர்களது தொடர்பை உடனடியாக துண்டித்து விடுங்கள் .

வீட்டிலுருந்தே சமூக வலைதளங்கள் மூலமாக அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று பகுதி நேர வேலை வாய்ப்புகள் வழங்குகிறோம் என்று  ஆசை வார்கதை கூறினால் அதனை நம்பி யாரும் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் .

சமூக வளதளங்களில் அல்லது தெரிந்தவர்கள் யாரேனும் உங்களிடம் பணம் தருவதாக கூறி வங்கி கணக்குகள் மற்றும் சிம் கார்டு கேட்டால்  அதனைநம்பாதீர்கள் மேலும் இதனால் உங்களை காவல் துறையால் கைது செய்ய நேரிடும் .

 உங்கள் வங்கி கணக்கு சஸ்பெண்ட் செய்வதாக கூறி வாட்ஸ் ஆப் மூலமாக ஏதேனும் லிங்க் மற்றும் ஆப் மெசேஜ் வந்தால் அதனை  click / Install செய்யாதீர்கள் .

இதுபோன்று தொடர்பு கொள்ளும் நபர்களை  உறுதிப்படுத்தாமல் எந்த செய்யலையும்  செய்ய வேண்டாம். இது மோசடிக்காரர்களின் பயன்படுத்தும் யுக்திகள் என்று மக்கள் மன்றத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும்  முதுநிலை  காவல் கண்காணிப்பாளர்  இணைய வழியில் ஏமாறாமல் இருப்பதற்கு சம்பந்தமான விழிப்புணர்வும்  அறிவுரையும் கூறினார்.

மேலும் இணைய வழி குற்றம் சம்பந்தமாக புகார் கொடுக்கவும் அல்லது ஏதேனும் சந்தேகம் இருந்தால் இணைய வழி காவல் நிலையத்தில் இலவச தொலைபேசி எண்: 1930 மற்றும் 0413-2276144/9489205246 மற்றும் மின்னஞ்சல்:cybercell-police@py.gov.in  தொடர்பு கொள்ளலாம். இணையத்தில் புகார் அளிக்க www.cybercrime.gov.in.

Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0