பாண்டிச்சேரியில் தமிழ்நாடு–பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் இடையேயான இறகுப்பந்து போட்டி தொடக்கம்

Saturday, September 27, 2025 - 23:36
Updated: 11 months ago
0
பாண்டிச்சேரியில் தமிழ்நாடு–பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் இடையேயான இறகுப்பந்து போட்டி தொடக்கம்

பாண்டிச்சேரி (RNI) பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்களுக்கு இடையேயான இறகுப்பந்து போட்டி  லாஸ்பேட்டை அரசு உள் விளையாட்டு அரங்கத்தில்  நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வழக்கறிஞர் சார்ந்த பொதுச் செயலாளர் வரவேற்புரை ஆற்றினார். உள்துறை மற்றும் விளையாட்டு அமைச்சர்  நமச்சிவாயம்  விளையாட்டுப் போட்டியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். வழக்கறிஞர்கள்  சங்கத்தில் தலைவர் சி.டி.ரமேஷ் வழக்கறிஞர் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு.வீ. நாராயணகுமார், பொருளாளர் ராஜபிரகாஷ் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.  சங்கத்தின் பொருளாளர் ராஜபிரகாஷ் நன்றியுரை ஆற்றினார். விழாவுக்கான ஏற்பாடுகளை விளையாட்டு குழு நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் லட்சுமணன், சூசைராஜ், தேவேந்திரன், நரசிம்ம பாலன் ஸ்ரீவாட்சன் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். அதனை தொடர்ந்து நாளை 28.9.2025 வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நாளை மாலை 6 மணி அளவில் நடைபெற உள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User