புதுச்சேரியில் சாதனை: மூளைச்சாவடைந்த நபரின் சிறுநீரகம், கல்லீரல் வெற்றிகரமாக மாற்று அறுவை சிகிச்சை
புதுச்சேரி (RNI) லாரி விபத்தில் மூளை சாவு அடைந்த நபரின் சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் ஆகியவற்றை வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நோயாளிகளுக்கு பொருத்தி ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை மருத்துவ குழுவினர் சாதனை படைத்தனர்
இதுகுறித்து மூலக்குளம் ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை சேர்மன் டாக்டர்.முருகேசன், துணை சேர்மன் டாக்டர்.சத்தியவேணி, மருத்துவமனை இயக்குனர் டாக்டர்.வெங்கட்ராம் ஆகியோர் இன்று நிருபர்களிடம் கூறுகையில்,...
கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டிவனம் அருகே ஏற்பட்ட விபத்தில் ராமு வயது 55 என்பவர் படுகாயம் அடைந்தார். அவர் மேல் சிகிச்சைக்காக ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. திடீரென அவர் மூளைச்சாவு அடைந்தார். அவரது உறுப்புகளை தானம் செய்ய ராமு வீட்டார் முன்வந்தனர். இந்நிலையில் அவரது உறுப்புகளை மாற்று அறுவை சிகிச்சை கமிட்டியினர் இதுகுறித்து ஆலோசனை நடத்தினர்.
பின்னர் ராமுவின் சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மூளை சாவடைந்த ராமு உடல் உறுப்புகள் வெற்றிகரமாக அகற்றப்பட்டு இரண்டு சிறுநீரக நீரகங்களில் ஒன்று ஒரு ஆணுக்கும் மற்றொன்று ஒரு பெண்ணுக்கும் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
கல்லீரல் புதுச்சேரி எம் ஜி எம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்த டாக்டர் முருகேசன் தலைமையிலான மருத்துவ குழுவினர் டாக்டர் வேல் அரவிந்தன், டாக்டர் அருண், டாக்டர் ரஹீனா, டாக்டர் சிவராஜ், டாக்டர் ரத்தினவேல் காமராஜ், டாக்டர் ஜெயராம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஒருங்கிணைப்பாளர்கள் பிரதீப்குமார், செல்வமுருகன் ஆகியோர் பாராட்டப்பட்டனர்.
இதுவரை ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனையில் இதுவரை 25 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரி தனியார் மருத்துவமனை வரலாற்றில் மூளைச்சாவு அடைந்த நோயாளியின் சிறுநீரகங்கள் அகற்றப்பட்டு இரண்டு பேருக்கு ஒரே நேரத்தில் பொருத்தப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது மருத்துவமனை பொது மேலாளர் ராமலிங்கம், தலைமை நிர்வாக அதிகாரி அப்துல் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0



