தொலைந்த 240 செல்போன்கள் கண்டுபிடிப்பு; உரிமையாளர்களிடம்

Sunday, June 14, 2026 - 14:29
Updated: 2 months ago
0
தொலைந்த 240 செல்போன்கள் கண்டுபிடிப்பு; உரிமையாளர்களிடம்

தமிழ்நாடு,புதுச்சேரி ஆந்திரா,கர்நாடகா மற்றும் பீகாரை சேர்ந்த 240 பேரின் செல்போன்களை ஒரே மாதத்தில் கண்டுபிடித்த சைபர் கிரைம் போலீசார்..

தற்போது செல்போன் இன்றைய காலகட்டத்தில் முதியவர்கள். இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்துகின்றனர். வங்கி பரிவர்த்தனைகள், கல்வி தொடர்பான செயல்பாடுகள் மற்றும் பல்வேறு அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் வழியாகவே மேற்கொள்ளப்படுகின்றன. செல்போன் தொலைந்து போகும் சூழ்நிலையில், தனிநபர்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் முக்கிய சேவைகளுக்கான அணுகல் பெரிதும் பாதிக்கப்படுவதால், அவர்களின் இயல்பு வாழ்க்கை சிரமத்திற்குள்ளாகிறது. பொதுமக்களின் இந்த சிரமத்தை கருத்தில் கொண்டு, புதுச்சேரி காவல்துறையினர் தொலைந்த செல்போன்களை கண்டறிந்து உரிய உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் பணியை தொடர்ந்து, மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, பொதுமக்கள் இழந்த சுமார் 240 செல்போன்கள், அவற்றின் உரிமையாளர்களிடம்

சைபர் கிரைம் முதுநிலை கண்காணிப்பாளர் ராகவ் இன்று வழங்கினார்  

மீட்கப்பட்ட செல்போன்களில் சுமார் 163 செல்போன்கள் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த புகார்தாரர்களுக்கு சொந்தமானவை. மீதமுள்ள செல்போன்கள் தமிழ்நாடு. ஆந்திரா,கர்நாடகா மற்றும் பீகார் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த புகார்தாரர்களுக்கு உரியவை. 

செல்போன்கள் காணாமல் போனாலோ அல்லது திருடப்பட்டாலோ பொதுமக்கள் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User