3600 அடி நீளத்தில் தேசிய கொடி, ஆயிரம் மாணவர்கள் அணிவகுத்து ஏந்தி சென்ற பேரணி

Saturday, August 16, 2025 - 20:20
Updated: 1 year ago
0

புதுச்சேரி (RNI) புதுச்சேரி சென்ட்ரல் அரிமா சங்கம் சார்பில் போதை விழிப்புணர்வு பேரணி இன்று மேற்கொள்ளப்பட்டது.சுதேசி மில் அருகில் இருந்து NCC,NSS மாணவர்கள் ஆயிரம் பேர் 3600 அடி நீளமுள்ள  தேசிய கொடியை ஏந்தி வந்தனர்.

இப்பேரணியை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் துவக்கி வைத்தார்.  மறைமலை அடிகள் சாலை,மிஷன் வீதி வழியாக மாணவர்கள் தேசிய கொடியுடன் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேனர்களை ஏந்தி வந்தனர். இறுதியாக கடற்கரை சாலை காந்தி சிலை முன்பு பேரணி முடிந்தது. அங்கு போதை ஒழிப்பு விழிப்புணர்வு காண உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. மாணவர்களுக்கு நாட்டுப்பற்று மற்றும் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது..

Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User