வில்லியனூர் கோகிலாம்பிகை சமேத ஸ்ரீ திருக்காமீஸ்வரர் ஆலயத்தில் மயிலம் பொம்மபுர ஆதினம் ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் 100 வது மாத பௌர்ணமி விழாவை தொடங்கி வைத்தார்.
வில்லியனூர் கோகிலாம்பிகை சமேத ஸ்ரீ திருக்காமீஸ்வரர் ஆலயத்தில் பௌர்ணமி நாளில் மாட வீதி வலம் வருவதை பௌர்ணமி விழா குழுவினர் செய்து வருகின்றனர். நேற்று 100 வது மாத பௌர்ணமி விழா நடைபெற்றது. விழாவிற்கு மயிலம் பொம்மபுர ஆதினம் ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் குத்து விளக்கேற்றி 100 வது மாத பௌர்ணமி விழாவை தொடங்கி வைத்தார். இவ்விழாவில் வில்லியனூர் சட்டமன்ற உறுப்பினர் சிவா , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நடராஜன் மற்றும் கோவில் நிர்வாக அதிகாரி திருவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் பௌர்ணமி விழா குழு மற்றும் இளைஞர் குழு சார்பாக காலை, மதியம், இரவு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டினை பௌர்ணமி விழா குழுவினர் முருகன் (எ) முனிசாமி, பரமநாதன், செம்மனேரி, ஜெய்கணேஷ், சிவக்குமார், ஆறுமுகம் மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)