புதுச்சேரியில் CEME 2025 சர்வதேச அவசர மருத்துவ மாநாடு: 100க்கும் மேற்பட்ட நிபுணர்கள் பங்கேற்பு

Friday, September 19, 2025 - 13:49
Updated: 12 months ago
0
புதுச்சேரியில் CEME 2025 சர்வதேச அவசர மருத்துவ மாநாடு: 100க்கும் மேற்பட்ட நிபுணர்கள் பங்கேற்பு

புதுச்சேரி (RNI) புதுச்சேரியில் நடைபெறும் சர்வதேச அவசர வைத்திய கல்வி மாநாட்டில்  உலக நாடுகளைச் சார்ந்த 100-க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கிறார்கள் என்று விநாயகா மிஷன் மருத்துவமனை டாக்டர் நவீன் தெரிவித்தார்

இது குறித்து விநாயகர் மெஷின் மருத்துவமனையின் அவசர சிகிச்சை மருத்துவர் நவீன் கூறும்போது...

விநாயகா மிஷன்ஸ், புதுச்சேரி அறுபடை வீடு மருத்துவக் கல்லூரி, மற்றும் அவசர வைத்தியக் கல்வியாளர் சங்கம் இணைந்து நடத்தும் CEME 2025 சர்வதேச மாநாடு வருகின்ற 25-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை என நான்கு நாட்கள் நடத்துகிறது இந்த  மாநாட்டை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைக்கிறார் என்று தெரிவித்தார்

சர்வதேச மாநாட்டில் 12 சர்வதேச நிபுணர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட தேசிய அளவிலான முன்னணி நிபுணர்கள் பங்கேற்கின்றனர். 

மேலும் பிஜிஐ சண்டிகர், ஏய்ம்ஸ்
ரிஷிகேஷ், ஏய்ம்ஸ் டெல்லி, ஜிப்மர் போன்ற முன்னணி மருத்துவக் கல்வி
நிறுவனங்களில் இருந்தும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் மருத்துவர் நிபுணர்கள் பங்கேற்கின்றனர்.

நான்கு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் தேசிய அளவிலும் உலக நாடுகளை பேச்சாளர்கள் கலந்து கொண்டு சுமார் 300 இருந்து 350 க்கும் அதிகமான ஆராய்ச்சி கட்டுரைகளை மாநாட்டில் சமர்ப்பிக்கிறார்கள் என்று தெரிவித்த டாக்டர் நவீன்..நியூராலஜி சம்பந்தமான நவீன அறுவை சிகிச்சைகள் குறித்த விவரங்கள் இந்த மாநாட்டில் பேசப்பட உள்ளது என்றும் 
மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கும் சிறப்பு வகுப்புகள் நேரடி பயிற்சிகள் ஆகியவை இடம்பெற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூராலஜி நிபுணர்கள் சங்கத்தின் ஆண்டு மாநில மாநாடு விநாயக மிஷின் மருத்துவமனையில் நாளை தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.இந்த மாநாட்டில் யூராலஜி சிகிச்சையில் ஏற்பட்டுள்ள நவீன முன்னேற்றங்கள் குறித்து கலந்து உரையாடல்  நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டின் போது ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரியின் டீன் டாக்டர் மணி, துணைத்தலைவர் டாக்டர் ராஜன் மருத்துவ கண்காணிப்பாளர் தாமோதரன், மயக்க மருந்து பேராசிரியர் எழில் ராஜன், அமைப்புச் செயலாளர் நவீன், தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் மணிமாறன், மருத்துவ இயக்குனர் டாக்டர் செல்வம், தலைமை மருத்துவர் டாக்டர் அண்ணாமலை, அமைப்புச் செயலாளர் டாக்டர் வினோத் ஆகியோர் உடன் இருந்தனர்.

Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User