வரும் தேர்தலில் புதுச்சேரியில் காங் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்

Tuesday, February 17, 2026 - 18:57
Updated: 6 months ago
0
வரும் தேர்தலில் புதுச்சேரியில் காங் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்

புதுச்சேரியில் காங்கிரஸ் சார்பில் என்.ஆர்.காங்-பாஜக அரசை கண்டித்தும் காங்கிரஸ் அரசு அமைய வலியுறுத்தியும் ஜன-21-ம் தேதி முதல் பிப் 2-ம் தேதி வரை Walk for puducherry-புதுச்சேரிக்கான நடைபயணம் நடைபெற்றது.

இன்று இதன் நிறைவு பயணம் மேற்கொள்ளப்பட்டது..

சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் தேசிய பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் பங்கேற்றார்.

ராஜீவ் காந்தி சிலையிலிருந்து துவங்கிய நடைபயணம் தாரை தப்பட்டை உடன் காமராஜர் சாலை, நேரு விதி, வழியாக சென்றது.

நடை பயணத்தில் காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம்,முன்னாள் முதல்வர் நாராயணசாமி மற்றும் நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

நடைபயணத்தின் இடையே பெரியார் சிலை அருகே காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் முன்னிலையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் துணை சபாநாயகர் டி.பி.ஆர்.செல்வம் காங்கிரஸில் இணைந்தார்..

நடை பயணமானது காமராஜ் சாலை,நேரு வீதி வழியாக மிஷன் வீதியை அடைந்தது.மிஷன் வீதி நிறைவடைந்தது.

கூட்டத்தில் பேசிய KC வேணுகோபால் ..

பெஸ்ட் புதுச்சேரி என பிரதமர் மோடி கூறினார். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் எதையும் பிரதமர் செய்யவில்லை. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அளிக்க வில்லை. அரசாங்கத்தில் வேலைவாய்ப்பு இல்லை. இதனால் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் இரட்டை இஞ்சின் அரசு நடக்கிறது என்றார்கள். ஆனால் மக்களுக்கு அளித்த வாக்குறுதி எதையும் அரசு செயல்படுத்தவில்லை. புதுச்சேரி மக்களை என்.ஆர்.காங்கிரஸ் பாஜக அரசு ஏமாற்றி விட்டது. போலி மருந்து உற்பத்திக்கு புதுச்சேரி அரசு உடந்தையாக இருந்துள்ளது. 

4 ஆண்டாக போலி மருந்து தொழிற்சாலை புதுச்சேரியில் அனுமதியின்றி இயங்கியுள்ளது. இந்தியாவின் ஊழல் மையமாக புதுச்சேரியை மாற்றி விட்டார்கள். என்ஆர்.காங்கிரஸ்-பாஜகவுக்கு வரும் தேர்தலில் மக்கள் சரியான பதிலளிக்க வேண்டும்.வரும் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User