புதுச்சேரி தேர்தல் திருவிழா: ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் களைகட்டியது

Monday, March 23, 2026 - 21:35
Updated: 4 months ago
0
புதுச்சேரி தேர்தல் திருவிழா: ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் களைகட்டியது

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக மாநில செயலாளரும்,உப்பளம் தொகுதி வேட்பாளருமான அன்பழகன் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்த அவர், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் பட்சத்தில் ஆட்சியில் பங்கு கேட்போம் என்று தெரிவித்தார்

புதுச்சேரியில் உள்ள 30 தொகுதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 9-ம் தேதி நடைபெற உள்ளது இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 16-ம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைகிறது.

இதனை ஒட்டி திமுக, காங்கிரஸ், பாஜக, என்.ஆர்,காங்கிரஸ் கம்யூனிஸ்ட் , லட்சிய ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சார்ந்த வேட்பாளர்கள் இன்று ஒரே நாளில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருவதால் புதுச்சேரியே திருவிழா போன்று காட்சி அளித்தது.

இதன் ஒரு பகுதியாக தேசிய ஜனநாயக கூட்டணியில் உப்பளம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அன்பழகன் இன்று தனது வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதற்காக தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்த அவர் புதுச்சேரி போக்குவரத்துறை அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 

 பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக வேட்பாளர் அன்பழகன்..

புதுச்சேரியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று உறுதிப்பட தெரிவித்தார். அப்படி ஆட்சி அமையும் பட்சத்தில் ஆட்சியில் அதிமுக பங்கு கேட்போம் என்று தெரிவித்த அவர் தேர்தல் இறுதி நாள் வரை கூட்டணியை முடிவு செய்ய முடியாதவர்கள் நாளை மக்களுக்கு என்ன செய்யப் போகிறார்கள் என்று கேள்வி எழுப்பிய அன்பழகன் இவர்களுக்கு எல்லாம் மக்கள் இந்த தேர்தலில் சரியான பாடத்தை கற்றுக் கொடுப்பார்கள் என்று குறிப்பிட்டார்.

பேட்டி: அன்பழகன், மாநில செயலாளர் உப்பளம் தொகுதி வேட்பாளர்

இதனிடையே உருளையன்பேட்டை தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஏபேல் இளவரசன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

 பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர்...

இந்த தேர்தலில் பண பலத்த நம்பி போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் அன்புமணி ராமதாஸ் தன் மீது வைத்த நம்பிக்கையின் பெயரால் இந்த தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறேன் தான் வெற்றி பெறும் பட்சத்தில் ஏழை எளிய மக்களின் நிலைகளை உணர்ந்து அவர்களுக்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பேன் என்றும் உறுதியளித்தார்.

பேட்டி: ஏபேல் இளவரசன் பாமக வேட்பாளர், உருளையன்பேட்டை தொகுதி

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User